ஐ.ஆர்.எஸ். சர்வேயில் மற்றுமொரு அங்கீகாரம் சன் குழுமத்தின் ரேடியோ நெட்வொர்க் இந்தியாவின் நம்பர் 1 சாதனை

புதுடெல்லி: நாட்டிலேயே அதிக நேயர்கள் விரும்பிக் கேட்கும் பண்பலை அலைவரிசைகளில் சன் குழுமத்தின் சூரியன் எப்.எம்./ ரெட் எப்.எம்.  நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது.சன் குழுமத்தின் பண்பலை வானொலி சூரியன் எப்.எம். தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளில் ரெட் எப்.எம். என்ற பெயரில் இந்த சேவை வழங்கப்படுகிறது. சன் குழுமத்தின் இந்த ரேடியோ நெட்வொர்க் இந்தியாவின் மிகப்பெரும் வானொலி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. புதுமையும் இனிமையும் கலந்து மக்களின் மனம் கவர்ந்த வானொலியாக உள்ளது சூரியன் எப்.எம்.

இந்தியன் ரீடர்ஷிப் சர்வே எனப்படும் ஐஆர்எஸ் அமைப்பின் சார்பாக 2019ன் நான்காம் காலாண்டில் ரேடியோ நேயர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில் நாட்டிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது சன் குழுமத்தின் சூரியன் எப்.எம்/ரெட் எப்.எம்.

நாடு முழுவதும் ரேடியோ நேயர்களிடம் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்தான் இந்திய நகரங்களில் ஒரே அலைவரிசையில் இயங்கி வரும் பண்பலையில் அதிகபட்சமாக 5.26 கோடி நேயர்களின் விருப்பத்தைப் பெற்று, மக்களின் மனம் கவர்ந்த ரேடியோ நெட்வொர்க்காக சூரியன் எப்.எம்./ரெட் எப்.எம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய எப்.எம். ரேடியோவான சன் குழுமத்தின் எப்.எம். நெட்வொர்க் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது.

Related Stories: