வங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்படுகிறது. மன்னர் வளைகுடா கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: