பொது தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற ஏதுவாக 109 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொது தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற ஏதுவாக 63 வழித்தடங்களில் 109 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும், பேருந்துகளில் பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துக்கள் காலை 9 மணி அளவில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: