வணிகர் சங்கத் தலைவர் உட்பட 86 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னையிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் திருவிக நகர் மண்டலம் 5வது இடத்தில் உள்ளது. அந்த வகையில் நேற்று பெரம்பூர் நெல்வயல் சாலையில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதேபோன்று செம்பியம் பகுதியில் அவ்வை தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 பேருக்கும் தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் ஒருவருக்கும் சுப்புராயன் 5வது தெருவில் 55 வயது பெண்மணிக்கும் எஸ்.எஸ்.புரம் ஏ பிளாக் பகுதியில் 23 வயது பெண்ணுக்கும் அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் தெரு பகுதியில் 45 வயது மருத்துவ பிரதிநிதிக்கும் புளியந்தோப்பு ராமசாமி தெருவில் 32 வயது கர்ப்பிணிக்கும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒரே வீட்டில் 3 பேருக்கும் ஓட்டேரி பகுதியில் ஜெசிகா காலனி பகுதியில் ரயில்வேஊழியர் ஒருவருக்கும் வெங்கடேசன் தெருவில் மாநகராட்சி ஊழியர் என நேற்று ஒரே நாளில் திருவிக நகரில் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: