உழைப்பை உறிஞ்சிவிட்டு நன்றி மறக்ககூடாது: வெளிமாநில தொழிலாளர்களுக்கு எல்லா வசதியும் தரவேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ேஹமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய  மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிடுகிறோம்.

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? உள்ளிட்ட விபரங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய உணவு கூட வழங்கப்படவில்லை, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ரயில் நிலையங்களில் தவிர்த்து வருகிறார்கள் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் தமிழகத்தில் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இருப்பிடம் உணவு உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு நன்றி மறக்ககூடாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமை தள்ளிவைத்தனர்.

Related Stories: