தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்: சென்னை மாநகராட்சி அறிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக 10 அரசு ஆய்வு மையங்கள் மற்றும் 13 தனியார் ஆய்வு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சுகாதாரத்துறைக்கு மாற்று மாநகராட்சி நிர்வாகத்துக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில தனியார் மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் தகவல்கள் கண்காணிக்கப்பட முடியாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தகவல்கள் முடியாக பெறப்பட முடியவில்லை.

இதனால் பலருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில் தனியார் மையங்கள் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்தவர்களில் சிலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று உறுதியானவர்கள் தங்களை தனிமைப்படுத்தாமல் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. தனிமைப்படுத்தாமல் உள்ள சிலரால் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண்ணை பதிவு செய்வதன் மூலம் தொற்று உறுதியானவர்களை எளிதில் கண்காணிக்க இயலும் என கூறப்படுகிறது.

Related Stories: