சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் கிராமிற்கு ரூ.30 குறைந்து ரூ.4,468-க்கும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை :சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாகத் தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஆபரணத் தங்கத்தின் விலை விரைவில் 37,000 ரூபாயைத் தாண்டிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அஞ்சிய நிலையில் இன்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று (ஜூன் 3) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.4,468-க்கு விற்பனையாகிறது.

நேற்று இதன் விலை ரூ.4,507 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30  ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல நேற்று ரூ.36,056-க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.54.70 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.54.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>