மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்காக அமித்ஷா புதிய யுக்தி; ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டம்...!

கொல்கத்தா; கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகாது குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தகவல்  வெளியாகியுள்ளது. அமெரிக்கா சென்று ஊரடங்கால் இந்தியா  திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி தவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அண்மையில் நாடு திரும்பினார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுனில் அரோரா அலுவலகம் வந்து பணிகளை  தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் முதல் தமிழக தேர்தல் தலைமை அதிகாரிகள் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த, நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக மேற்கு வங்கத்தில் வரும் 8-ம் தேதி பேஸ்புக் வாயிலாக ஆன்லைன் பொதுக்கூட்டம் பாஜக திட்டமிட்டுள்ளது. இது பொதுக்கூட்டத்தை பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துரை அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைபோல், மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகியபோது அவருடன் சேர்ந்து 22 எம்எல்ஏ.க்கள் பதவி விலகினர். இரண்டு எம்எல்ஏ.க்கள் உடல்நலக் குறைவினால் காலமாகினர். இதனால், இங்கு சட்டப்பேரவையின் பலம் 206 ஆக உள்ளது.  

இங்கு காலியாக உள்ள 24 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் பற்றி. தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் ஆலோசிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ சர்மா தெரிவித்துள்ளார். இதனை முறியடிக்கும் விதமாக அமித்ஷா புதிய யுக்தியை கையாளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: