குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தனிமை வார்டு அமைக்க எதிர்ப்பு

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் இட நெருக்கடி காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பெரம்பூர் பார்த்தசாரதி தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியை தனிமை வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மண்டல அதிகாரிகள், செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேந்தர் செம்பியம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்டோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமை வார்டு அமைத்தால்,  அங்கிருந்து, அருகில் உள்ள மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.  எனவே, இதற்கு அனுமதிக்க மாட்டோம், என பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து இங்கு சிகிச்சை அளிக்க மாட்டோம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைதான் இங்கு தனிமைப்படுத்த உள்ளோம், என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: