தேநீர் கடைகளுக்கு உதவ ‘ஒரு டீ சொல்லுங்க’ திட்டம்: டாடா டீ சக்ரா கோல்டு அறிமுகம்

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தேநீர் கடைக்காரர்களுக்கு இடைக்கால நிதிதிரட்டி வழங்கும் வகையில், ‘ஒரு டீ சொல்லுங்க’ என்ற முன் முயற்சி திட்டத்தை டாடா டீ சக்ரா கோல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து டாடா டீ சக்ரா கோல்டு நிறுவனத்தின் டாடா நுகர்வோர் தயாரிப்புகள், பானங்கள் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் துணை தலைவர் புனீத்தாஸ் கூறியதாவது: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக தேநீர் கடைக்காரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாட்டின் பிரபல தேயிலை பிராண்டான டாடா டீ சக்ரா கோல்டு நிறுவனம், ‘ஒரு டீ சொல்லுங்க’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேநீர் கடைகளுக்கு இடைக்கால நிதி திரட்டி வழங்குவது இதன் நோக்கம். மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே ஒரு தேநீர் கோப்பைக்கு உண்டான பணம் ₹10ஐ வழங்கலாம். இதை oruteasollunga.bharatpe.com என்ற இணையதள பக்கம் அல்லது bharatpe.tea@icici என்ற யுபிஐ ஐடியில் பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் வழங்கலாம். அது தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட தேநீர் கடைகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் டாடா டீ சக்ரா கோல்டு நிறுவனம் தனது பங்காக 2 லட்சத்திற்கும் அதிகமான தேநீர் கோப்பைகளுக்கு உண்டான தொகையை நன்கொடையாக வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: