சீனாவிற்கு சிங்கி அடிப்பதை நிறுத்தினால் மீண்டும் WHO-ல் இணைவது குறித்து பரிசீலினை; அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை...!

வாஷிங்டன்: சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை உலக சுகாதார அமைப்பு நிறுத்தினால் அதில் மீண்டும் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இங்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டிரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அதிகப்படியான நிதியை அமெரிக்கா அளித்து வருகிறது. பல நேரத்தில் அந்த உலக சுகாதார அமைப்பு தவறான முடிவுகளையே எடுக்கிறது. மேலும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இது நல்லதற்கில்லை. நாங்கள் இனி மிகுந்த விழிப்புடன் செயல்படுவோம். உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடும் நிதியை நிறுத்தவும் தயங்க மாட்டோம்,’’ என்றார். தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக சுகாதார மையமும், சீனாவும் சேர்ந்து கொண்டு நாடகம் ஆடுகிறது. வுஹன் வைரஸ் பரவல் குறித்து சீனா மற்றும் உலக சுகாதர மையம் இரண்டும் முக்கிய விஷயங்களை மறைத்துவிட்டது. சீனா தவறு சீனா தவறு உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் பல கோடிகளை அள்ளிக்கொடுத்தோம். ஆனால் உலக சுகாதார மையம் சீனாவின் கைப்பாவை போல செயல்பட்டது. நாங்கள் 450 மில்லியன் டாலர் செலுத்தினோம்.

ஆனால் சீனா வெறும் 40 மில்லியன் டாலர் செலுத்தி உலக சுகாதார மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை உலக சுகாதார மையம் இதில் சரியாக செயல்படவில்லை. சீனாவை தொடர்ந்து உலக சுகாதார மையம் ஆதரித்து வந்தது. உலக நாடுகளுக்கு கொரோனா பரவுவதை சீனாவும், உலக சுகாதார மையமும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். ஆனால் அதை உலக சுகாதார மையம் செய்யவில்லை. உறவை துண்டிக்கிறோம் உறவை துண்டிக்கிறோம் இதனால் நாங்கள் உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை உலக சுகாதார அமைப்பு நிறுத்தினால் அதில் மீண்டும் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவிக்கையில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திவிட்டு, கொரோனா பாதிப்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால் மீண்டும் இணைவது குறித்து நிச்சயமாக முடிவெடுக்கப்படும்.

சீனாவை விட அதிக நிதியுதவியை அமெரிக்கா அளித்து வந்துள்ளது. ஆப்பிரிக்காவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை உலக சுகாதார நிறுவனம் காப்பாற்றவில்லை. அமெரிக்காதான் தேவையான உதவிகளை செய்துள்ளது. இதே போல் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா தேவையான உதவிகளை நேரடியாக செய்ய முடியும். சீனாவால் இயக்கப்படும் ஊழல் நிறுவனத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories: