இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயிலில் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில்நிலையத்தை தவிர்த்து பிறமாவட்டங்களில் முதல்கட்டமாக இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களில் வரும் பயணிகள் கட்டாயமாக இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்ேவ அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் என முக்கியமான ரயில் நிலையங்களை தவிர்த்து திருச்சி, விழுப்புரம், காட்பாடி, கோவை போன்ற ரயில் நிலையங்களில் இருந்து ஏசி வசதி இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தது.

 

இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ரயில்வேவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இதையடுத்து இன்று முதல் அந்த சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி கோவை- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12084,12083) ஜனசதாப்தி ரயில்களும், சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635, 12636) மதுரை- விழுப்புரம் இடையேயும், அதைப்போன்று திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் (22627,22628) திருச்சி-நாகர்கோவில் இடையேயும், கோவை- சென்னை இடையே இயக்கப்படும் ரயில் (12679, 12680) கோவை-காட்பாடி இடையே இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களுக்கு முன்பு நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில் முன்பதிவு செய்யும் போது ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அரசு உத்தரவின் படி இ-பாஸ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மண்டலத்திற்கோ, மாவட்டத்திற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ ரயில் மூலம் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசின் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் சிறப்பு ரயில்களில் பயணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.  

ரயில் பயணிகள் எதிர்ப்பு நிர்வாகம் கைவிரிப்பு

தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதால் அதில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மண்டலம் விட்டு வேறு மண்டலத்திற்கும், மாவட்டத்திற்கும் செல்லும் போது இ-பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று அறிவித்தனர். இதற்கு ரயில் பயணிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே டிக்ெகட் புக்கிங் செய்து பயணத்திற்கு தயாராக இருக்கும் போது இப்போது இ-பாஸ் கட்டாயம் என்றால் என்ன செய்வது. எனவே அவற்றை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு தெற்கு ரயில்வே சார்பில் அரசு உத்தரவை தான் செயல்படுத்துகிறோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

Related Stories: