கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க திடீர் ஆய்வு: டாஸ்மாக் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பதை தடுக்க திடீர் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடக்கிறது. இதேபோல், மதுபானங்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க  சேலம், திருச்சி, மதுரை மண்டலங்களில் தீவிர ஆய்வு நடத்த மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திடீர் ஆய்வின் மூலம் நாள் தோறும் எவ்வளவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்றால் ரூ.1000 அபராதம் விதிக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: