அரசிற்கு வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு கடன் உதவியை உடனுக்குடன் வழங்குக...முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்த்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஊரடகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர்  பழனிசாமி,

* கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

* தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

* தொழில்களுக்கு அத்தியாவசிய தேவையாக வங்கிகளின் கடனுதவி உள்ளது.

* பொதுத்துறை வங்கி அதிகாரிகள், அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

* விவசாயிகள், சுய உதவிக்குழு, சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்க வேண்டும்.

* விவசாயிகளுக்கு கடன் உதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களுக்கு உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* வங்கிகள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி உழவர் கடன் அட்டைகள் வழங்க வேண்டும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர்.

* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும்.

* வேளாண்மைத் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி வழங்கப்ட உள்ளது.  

Related Stories: