புதுடெல்லி: மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரைகள்: தற்போது தரைவழி தொலைபேசி இணைப்புகளில் இருந்து மொபைல் நம்பருக்கு டயல் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை. இனி, மொபைல் எண்ணுக்கு பேச முன்னதாக பூஜ்யம் சேர்த்து டயல் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டவையாக இருக்கின்றன. அதை 11 இலக்கமாக மாற்றலாம். இதற்காக, தற்போது உள்ள 10 இலக்க மொபைல் எண்ணுக்கு முன்பு 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும். இதன்மூலம் மொத்தம் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியும்.