காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 23 கோடியில் விளையாட்டு அரங்கம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் 15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நவீன தரத்துடன் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம், அலுவலர் அறை, பயிற்றுநர் அறை, அலுவலக அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, சமையலறை, உணவருந்தும் கூடம், தங்குமிட வசதி, கணினி அறை, நூலகம், பதிவறை, இருப்பு அறை, முதலுதவி அறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கூடிய நிர்வாக கட்டிடம், பார்வையாளர் மாடத்துடன் கூடிய திறந்தவெளி விளையாட்டரங்கம், கூடைப்பந்து மற்றும் கையுந்துபந்து ஆடுகளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் சைக்கிளிங் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த ஏதுவாக 6 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சைக்கிளிங் வெலோடிரம், பார்வையாளர் மாடத்துடன் கூடிய நிர்வாக கட்டிடம் ஆகிய விளையாட்டு கட்டமைப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் சண்முகம், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: