சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்ததாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த கே.எம்.கணேசன் (கோம்மை பேரூராட்சி கழக பொருளாளர்) அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.