தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அலுவலகங்களை மூட உத்தரவு: ஊழியர்களுக்கு கொரோனா உறுதியால் அதிரடி

சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர, அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த உதவி லோகோ பைலட் ஆக பணி புரிந்து வரும் நபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் (பிசிஓஎம்) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கடந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர்.

இதையடுத்து சோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏடிஆர்எம் பதவியில் பணிபுரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்து. இதையடுத்து தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மூடுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: