கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு 1.5 லட்சம் ஹார்லிக்ஸ் பேக்: இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் வழங்குகிறது

சென்னை: இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த 1.5 லட்சம் ஹார்லிக்ஸ் பேக்குகளை நன்கொடையாக வழங்குகிறது. முதல் தொகுப்பு ஏற்கனவே இந்தியா முழுவதும் 39 கோவிட் மருத்துவமனைகளை அடைந்துள்ளன. விரைவில், 12 முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவிட் மருத்துவமனைகளையும் இது சென்றடைய உள்ளன. இதுகுறித்து HUL தலைவரும், நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா கூறுகையில், “தற்போதுள்ள சுகாதார நெருக்கடியில் நாம் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். எனவே, ஆரோக்கியமான உணவை நாம் கொண்டிருக்க வேண்டும்.

ஹார்லிக்ஸ் பால், கோதுமை மற்றும்  மால்ட் பார்லியின் நன்மைகளுடன் புரதங்கள், ஜிங்க், வைட்டமின் சி மற்றும்  வைட்டமின் டி போன்ற 23 முக்கிய ஊட்டச்சத்துக்களுடன் செலினியம், போலிக்  அமிலம், இரும்பு, வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் பி 6 போன்ற  ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.   ஜிங்க், வைட்டமின் சி மற்றும்  வைட்டமின் டி ஆகியவை நோய்களுக்கு எதிரான  எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பதற்கான  ஆய்வக ஆதாரங்கள் உள்ளன. எனவே, சுகாதார ஊழியர்களுக்கும், வழங்குநர்களுக்கும் பல மருத்துவமனைகளுக்கு ஹார்லிக்ஸ் வழங்க முடிந்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

Related Stories: