புதுச்சேரியில் 2 மாதத்துக்கு பின் மதுபானக் கடைகள் திறப்பு: விலை உயர்வால் குடி மகன்கள் வேதனை

புதுச்சேரி:  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க கடந்த 24ம்தேதி இரவு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார். 60 நாட்களுக்குபின் நேற்று காலை  10 மணியளவில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மற்றபடி 150க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் புதுவையில் திறக்கப்பட்டன.  மதுவாங்க வந்தவர்கள் கடைகள் முன்பு சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அண்ணா சாலை, காமராஜர் சாலை மொத்த மதுபான கடையில் மதுபிரியர்கள் சரக்குகளை வாங்க முட்டி மோதினர். ரங்கப்பிள்ளை வீதி உள்ளிட்ட சில்லறை கடைகளீல் சமூக இடைவெளிக்காக போடப்பட்டிருந்த வளைத்திற்குள் தங்களது செருப்புகள், கட்டை பைகளை காலையிலே போட்டு வரிசையில் இடம்பிடித்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான சரக்கை வாங்கிக் சென்றனர். தமிழகத்துக்கு நிகராக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால் பெரும்பாலானோர் புலம்பி வேதனையடைந்தனர்.

வேதங்கள் ஓதி மது விற்பனையை தொடங்கி வைத்த குருக்கள்

புதுவையில் நேற்று காலை 10க்கு அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்கள் கழித்து கடைகள் திறப்பதால் முறைப்படி வேதங்கள் ஓதி திறந்து வைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ஒரு மதுக்கடையில் நேற்று முறைப்படி வேதங்கள் ஓதி குருக்கள் திறந்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குவார்ட்டர் 120, பீர் 240, புல் 480

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 920 வகையான மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இவற்றில் 154 மது வகைகள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதால் அம்மாநிலத்துக்கு நிகராக இந்த சரக்குகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 766 மதுவகைகள் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதால் அவற்றுக்கு 25 சதவீத கோவிட் வரியும், கள் மற்றும் சாராயத்துக்கு 20 சதவீத கோவிட் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகம் விற்பனையாகும் 650 மில்லி பட்வைசர் கிங் ஆப் பீர் பாட்டில் 127 ரூபாய் விலை உயர்ந்து ரூ.240க்கு விற்கப்பட்டது. மெக்டவல் குவார்ட்டர் ரூ.120, ஆப் ரூ.184, புல் ரூ.480க்கு விற்கப்பட்டன. 3 மாதத்திற்கு இந்த விலை உயர்வு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்ததால் உள்ளூர் மதுபிரியர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

Related Stories: