திருவிக நகர் மண்டலத்தில் 58 பேருக்கு கொரோனா: மதிமுக அலுவலக ஊழியருக்கு நோய் தொற்று

பெரம்பூர்: அயனாவரம் திக்கா குளம் பகுதியில் 42  வயது நபருக்கு கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது. இவர், எழும்பூரில் உள்ள  மதிமுக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதிக்குட்பட்ட பிரிக்ளின் சாலையில் 2 பேர், மேடவாக்கம் டேங்க் சாலையில் 28 வயது கர்ப்பிணி,   செம்பியம் காவலர் குடியிருப்பு பகுதியில்  43 வயது போக்குவரத்து காவலர், திருவிக நகர் வரதராஜன் தெரு, ஆண்டாள் அவென்யூ, மதுரை சாமி மடம், சுப்பிரமணி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர், பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனி 2வது தெருவில் அம்மா மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.

வசந்தா கார்டன் தெருவை சேர்ந்த ரயில்வே மருத்துவமனை செவிலியர், அதே பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர், புளியந்தோப்பு காவலர் குடியிருப்பு பகுதியில் 45 வயது பெண் தலைமை காவலர் மற்றும் வஉசி நகரில் 26 வயது கர்ப்பிணி, கன்னிகாபுரம் சாஸ்திரி நகர், பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  ஓட்டேரி கொசப்பேட்டையை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி, ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே  காலனியை சேர்ந்த 31 வயது ரயில்வே ஊழியர், பழைய வாழைமா  நகர் கந்தசாமி கோயில் தெரு, ஹைதர் கார்டன் 1வது தெரு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: