சத்தியமங்கலம் பூ மார்க்கெட் நாளை முதல் செயல்படும்: சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதன் காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.  இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால் நான்காம் கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட் நாளை 25ம் தேதி திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் செயல்பட உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் பூக்களை சமூக இடைவெளிவிட்டு நின்று பூவை விற்பனை செய்யுமாறும், கட்டாயம் முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளோம். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பூ மார்க்கெட் செயல்படும். தற்போதைக்கு பூக்கள் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. எனவே பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் கொண்டு வரும் விவசாயிகள் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும்,’’ என்றனர். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பூ மார்க்கெட் செயல்படும். தற்போதைக்கு பூக்கள் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related Stories: