சாமானிய மக்கள் போக்குவரத்து சேவை பெறும் வகையில் தனியார் வாகனங்களை அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்: வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்  சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கார்கள் மற்றும் வேன்களை அரசு ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு  இயக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு மலிவான கட்டணத்தில் சேவை கிடைக்கும். இதன் மூலம்  வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வருவாயை உறுதி செய்ய முடியும்.

தமிழகத்தில் வாடகை வாகனங்களை இயக்குவதன் மூலம் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கலாம். மேலும், பொதுமக்களின் பயணம் பாதுகாப்பாகவும், மலிவு விலையில் கிடைக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: