சத்தியமங்கலம் அருகே சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளனர். இவை குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் மழையால் இக்கிராமங்களில் பயிரிடப்பட்ட 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் சேதமடைந்தன. சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் தற்போது, சூறாவளி காற்று வீசியதில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் சேதம் ஏற்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: