கடைகளுக்கு அபராதம்

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு, கண்ணப்பன் தெரு, தாசமகான் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories:

>