'பத்திரிகைகள் அவர்களின் கடமைகளை தான் செய்கிறார்கள்': தினகரன், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா மீதான அரசின் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை : அவதூறு வழக்குகள் பத்திரிக்கைகள் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடுத்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

வழக்கின் பின்னணி..

தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசியது குறித்து, அவ்வப்போது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்ந்து வருகிறது.அந்த வரிசையில், தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக கூறி தமிழக அரசு சார்பில், தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகிய நிறுவனங்களின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அவதூறு வழக்குகள் ரத்து!!

இதையடுத்து தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், அதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தி ஹிந்து, நக்கீரன் ,முரசொலி ,தினகரன் ,டைம்ஸ் ஆஃப் இந்தியா,தினமலர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.பத்திரிகைகள் அவர்களின் கடமைகளைத் தான் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் மீது எப்படி அவதூறு வழக்கில் தாக்கல் செய்யப்படுகின்றது” என்று கருத்து தெரிவித்த நீதிபதி பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

Related Stories: