வெளிநாட்டவர் முதலீடு 1,21 லட்சம் கோடி வாபஸ்

மும்பை: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் 1.21 லட்சம் கோடி முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனர்.  கொரோனா பரவலுக்கு பிறகு உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலை மிக மோசமாகி வருகிறது. இந்தியாவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு, முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனர்.  அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கையின்படி, ஆசிய நாடுகளில் இருந்து 2,600 (1,21,600 கோடி) கோடி டாலர் முதலீடு வாபஸ் பெற்றப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து மட்டும், வெளிநாட்டவர் முதலீடு 1,600 கோடி டாலர் அளவுக்கு வெளியேறியுள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: