ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயனடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களையும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி தொழிலாளர் குடும்பங்களையும் இலக்காகக்கொண்டு, அவர்கள் பயனடையும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து இரண்டாம் நிலை தாலுகா மருத்துவமனைகள், மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சையைப் பெறலாம். இந்தத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதற்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, பாலினம் போன்ற எதுவும் தடையில்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றுள்ளவர்களின் அடையாளத்தின் பேரில், இந்தத் திட்டத்துக்குப் பதிவுசெய்யலாம்.

சிகிச்சை பெற விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக 14555 என்ற தொலைபேசி எண்ணும், mera.pmjay.gov.in என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்தவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பட்டியலில் இடம்பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் வரையில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை இந்திய அரசே ஏற்கும். இந்தத் திட்டத்துக்கான செலவில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும். இந்தத் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டம் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இது தொடர்பாக , தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இது இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது. இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தோடு தொடர்புடைய எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்களுக்கு என அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகள் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக மாறியுள்ளது. இந்த முயற்சி பல இந்தியர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று பெயர்வுத்திறன். பயனாளிகள் தாங்கள் பதிவுசெய்த இடத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உயர்தர மற்றும் மலிவு மருத்துவ சேவையைப் பெற முடியும். வீட்டிலிருந்து விலகி வேலை செய்பவர்களுக்கு அல்லது அவர்கள் சொந்தமில்லாத இடத்தில் பதிவுசெய்தவர்களுக்கு இது உதவுகிறது. எனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணங்களின் போது, ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் நான் தொடர்புகொள்வேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில் அது சாத்தியமில்லை. ஆனால், ஒரு கோடி பயனாளராக நிறைவு செய்த கடைசி பெண்மணியான மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தாப்பாவிடம் பேசிய தொலைபேசி உரையாடலையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

Related Stories: