தமிழகத்தில் சென்னை உட்பட 11 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி; 28-ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு..வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 11 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. தமிழகத்தில் கோடைகாலத்தின் உச்சகட்டமான அக்னி வெயில் எனப்படும் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை நகரில் ஆம்பன் புயல் புண்ணியத்தால் நேற்று இரவு முதல் காலை வரை மழை கொட்டியது. இன்று காலையில் பலத்த காற்று வீசியது. ஆனால் இந்த வானிலை சட்டென மாறியது. சென்னை நகரில் இன்று பகலில் வெயில் கொளுத்தியது. தமிழகத்திலேயே சென்னை நகரிலதான் அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி கத்தரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் துவங்கியது.

வரும் 28 ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 106.5(41.3), நுங்கம்பாக்கம் 106.3(41.2),மதுரை106.5(41.3) கடலூர் 104(40), வேலூர், திருத்தணியில் 106.3(41.2), திருச்சி 100.9(38.2), மதுரை விமானநிலையம் 102(38.8), தூத்துக்குடி 102(38.8), பரங்கிப்பேட்டை 103(39.4), புதுச்சேரியில் 102.5(39.1) என பதிவாகி உள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சென்னையில் முதன் முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: