10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்: தேர்வுகள் ஜூன் 15 முதல் 25 வரை நடைபெறும்...அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...!

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதியை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்  பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி  எதுவும் நடத்த முடியாமல் போனது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி  வரை நடக்கும்.  பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு  ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல 34 ஆயிரத்து 842 மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத  காரணத்தால் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு  ஜூன் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் , அச்சப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க   கோரிக்கை விடுத்தனர். 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொடர்ந்து, தேர்வை தள்ளி வைக்க  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் இன்று தாக்கல்  செய்துள்ளார்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  முதல்வர் பழனிசாமியிள் ஒப்புதலுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

 

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்

ஜூன் 17-ம் தேதி ஆங்கிலப்பாடம்

ஜூன் 19-ம் தேதி கணிதம்

ஜூன் 20-ம் தேதி மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)

ஜூன் 22-ம் தேதி அறிவியல்

ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்

ஜூன் 25-ம் தேதி தொழில்கல்வி தேர்வு

Related Stories: