திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிய ஆய்வகம் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அவர்களின் ரத்த மாதிரி சேகரித்து சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பரிசோதனை முடிவு வர சில நாட்கள் ஆகின்றன. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வகத்தை திறந்து வைத்து அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை பிரிவை பார்வையிட்டார். இந்த ஆய்வகத்தில் தினமும் 40 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு முடிவுகள் பெறப்படும் என அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி தெரிவித்தார்.  

Related Stories: