ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் 20 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.