தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பால் குற்றங்கள் அதிகரிப்பு: குடிபோதையில் குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன

சீர்காழி: டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் குறைந்து இருந்த குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே போதையில் இருந்த 3 பேர் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். கூலி தொழிலாளி ஜீவானந்தத்தின் மகன் அலெக்ஸ்சாந்தரை தாக்கிய பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜுவை தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிபோதையில் இருந்த ராஜி, ராஜு, ராஜேஷ் ஆகியோர் ஜீவானந்தத்தை கொலை செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே குடிபோதையில் மோதிக்கொண்ட மகன் மற்றும் மருமகனை தடுக்க சென்ற வனஜா என்ற மூதாட்டி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த 7-ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட போது அலங்காநல்லூரில் குடிபோதையில் வந்த கணவனை கண்டித்து தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: