தீபாவளிக்கு விஜய், சூர்யா படம் ரிலீஸ்?

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு விலக்கப்பட்டாலும் தியேட்டர்கள் சில மாதங்களுக்கு  திறக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் ஏப்ரலில் திரைக்கு வந்து இருக்க வேண்டிய விஜய்யின் மாஸ்டர் படம், மேலும் சில மாதங்கள்  தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிட்டு வருகிறார்கள். இதே போல் சூர்யா நடிப்பில்  மே மாதம் வெளியாகவேண்டிய படம், சூரரை போற்று. இந்த படத்தையும் தீபாவளிக்கு தள்ளிப்போட திட்டமிட்டுள்ளனர்.

இதனால் ஒரே நாளில் விஜய், சூர்யா படங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறும்போது, ‘நவம்பர்  14ம் தேதி தீபாவளி வருகிறது. அதற்கு நேரம் இருப்பதால் அதற்குள் சூழ்நிலை மாறி, எங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த  சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளிவந்தால் இரண்டுமே சிறப்பாக ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றனர்.

Related Stories: