வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை, எளியோருக்கு நிவாரணம்: கலெக்டரிடம் திமுக கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா 144 தடை உத்தரவால் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார். அப்போது, காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் உடன் இருந்தனர். கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் துன்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் நிவர்த்தி செய்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட திட்டத்தின்படி பொதுமக்களின் உதவி எண் வழியாக சுமார் 15 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஏழை மக்களின் பசி தீர்க்கப்பட்டுள்ளது.

இந்த துன்பகரமான சமயத்தில் தேவை உள்ள மக்களுக்கு உதவுவதை தொடர் தொடர்ந்தாலும் உதவி கோரி அழைக்கும் மக்களின் குரலாக விளங்கி அவர்களுடைய துன்பத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் தார்மீக கடமையை செய்கிறோம். அதனால் திமுக கட்சியின் சொந்த நிவாரணம் முயற்சிகளுக்கு மேலாகவும் உதவி எண் மூலமாக கவனிக்கப்படாத கோரிக்கைகள் அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக மாவட்ட கலெக்டரிடம் 539 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.  இதற்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

அப்போது, உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், திமுக நிர்வாகிகள் எஸ்கேபி.சீனிவாசன், குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் யுவராஜ், எம்.எஸ்.சுகுமார், நகர துணை செயலாளர் ஜெகநாதன், எம்.எஸ்.வி. குமார், கிரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: