இந்தாளு மாஸ்க் போடல... புடிச்சு பைன் போடுங்க ஆபிசர்: தெலங்கானாவில் காட்டிக்கொடுக்கும் புதிய சாப்ட்வேர் அறிமுகம்

திருமலை: தெலங்கானாவில் முகக்கவசம் அணியாதவர்களை அடையாளம் காட்டும் கேமராவால் நூற்றுக்கணக்கானோருக்கு ‘ஸ்பாட் பைன்’ விதிக்கப்பட்டு வருகிறது.   தெலங்கானா மாநிலம் கரீம் நகருக்கு கடந்த மார்ச் மாதம் டெல்லியில் இருந்து திரும்பிய இந்தோனேஷியாவை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதில், டெல்லி சென்று வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என  கேட்டுக் கொண்டார். மேலும் மாநிலத்தில் வரும் 29ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமின்றி முகக்கவசம் அணியாமல் யார் வெளியே வந்தாலும் அவர்களை உடனடியாக கண்டறிந்து 1000 ‘ஸ்பாட் பைன்’ விதிக்க கடந்த 8ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புதிய சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் பழைய குற்றவாளிகளை கண்டறியும் ‘பேஸ் ரெககனேஷன்’ சாப்ட்வேர் உள்ளது. தற்போது முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்டறிய புதிய வகை சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்

டுள்ளது.

இதன் மூலம், முகக்கவசம் அணியாமல் கார், பைக் அல்லது சாலையில் நடந்து செல்பவர்களை அந்த மென்பொருள் வட்டம்போட்டு கேமராவில் காட்டிவிடும். இதனை அந்தந்த காவல் நிலையத்தில் இருந்தபடி போலீசார் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கானோர் ‘ஸ்பார்ட் பைன்’ செலுத்தினர்.

20 பேருக்கு கொரோனா

தெலங்கானா மாநிலம் முழுவதும் 1,139 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது. கடந்த சில வாரங்களாக மிக குறைவான எண்ணிக்கையில் நோய் தொற்று பதிவான நிலையில் நேற்று காலை மேலும் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிமாநில கூலித்தொழிலாளர்கள் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories: