சென்னை, பெங்களூரு, டெல்லியில் தங்கியுள்ள கேரள மக்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை: பினராய் தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இன்று (நேற்று) 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் 7ம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சிறப்பு விமானத்தில் கேரளா வந்தவர்கள் ஆவர். இன்று ஒருவருக்கு நோய் குணமாகியுள்ளது.  தற்போது 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியுள்ள அரசு முகாம்களில் 24 மணி நேரமும் ஒரு டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியில் உள்ளனர். வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்த பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 13 கோடியே 43 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று (நேற்று) மதியம் வரை வெளி மாநிலங்களில் இருந்து 21 ஆயிரத்து 712 கேரளா வந்துள்ளனர். 54 ஆயிரத்து 262 பேர் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மலையாளிகள் சிக்கியுள்ளனர். இவர்களை அழைத்துவர டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் இயக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்காக தகவல் மையங்கள் திறக்கப்படும்.

நேற்று ரியாத்தில் இருந்து 152 பயணிகளுடன் கோழிக்கோடுக்கு விமானம் வந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் கர்நாடகாவை சேர்ந்த 8 பயணிகளும் இருந்தனர். இந்த விமானத்தில் 78 கர்பிணிகளும் இருந்தனர். பக்ரைனில் இருந்து ேநற்று கொச்சிக்கு 181 பயணிகளுடன் ஒரு விமானம் வந்தது. இதல் 15 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 7ம் தேதி வந்த 2 விமானங்களில் வந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் அந்த விமானங்களில் வந்த அனைவருக்கும் நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் அவர்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: