கடல்மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் இருக்கும் லிபுலேக்கை இணைக்கும்முக்கிய சாலை திறப்பு

புதுடெல்லி: சீனாவின் எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் இருக்கும் லிபுலேக்கை இணைக்கும் வகையில் சுமார் 80 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடியோ கான்பரன்சிங் வழியாக நேற்று திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் தலத்திற்கு யாத்ரீகர்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர். லிபுலேக்கில் இருந்து மானசரோவர் 90 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. யாத்ரீகர்கள் கைலாஷ் மானசரோவர் செல்வதற்கு குறைந்தபட்சம் 3 வாரங்கள் ஆகும். புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால் இனி ஒரு வாரத்தில் அங்கு செல்ல முடியும்’’ என்றார்.

Related Stories: