மின்சார ரயில்கள் சோதனை ஓட்டம்

சென்னை: தமிழகத்தில் மே 17ம் ேததிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்படும் நிலையில் மே 20ம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரயில்களில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும், டிக்கெட் கவுன்டர்களில் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும், 4 பேர் இருக்கையில் 2 பேர் அமர வேண்டும், முன்பதிவில்லா பெட்டிகள் ரத்து செய்யப்படும், ரயில் நிலையங்களுக்கு பயணிகளை தவிர மற்ற நபர்கள் வரக்கூடாது இவ்வாறு சில கட்டுப்பாடுகளை விதித்து அதன் அடிப்படையில் படிப்படியாக ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரயில்களை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இயக்கும்போது இன்ஜினில் கோளாறு ஏற்படும் என்பதற்காக நேற்று பணிமனையில் இருந்து சில மின்சார ரயில்களை அண்ணனூர் ரயில்நிலையம் வரை ரயில்வே ஊழியர்கள் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: