டாஸ்மாக் திறக்க 2-வது நாளாக கடும் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் மதுபானக்கடைக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்...கைது நடவடிக்கையில் போலீஸ்

நெல்லை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை திறக்க 2-வது நாளாக பொதுமக்கள் எதிரிப்பு தெரிவித்து போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் 5,300  கடைகளில் 3,500 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை  50 வயதுக்கு மேற்பட்டவர்களும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களையும், 40 வயதுக்கு கீழ்  மாலை 3 மணிமுதல் 5 மணி வரை மதுபாட்டில் வாங்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட்டன. காலை 8 மணி முதல் மதுபாட்டில் வாங்க கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம், கூட்டமாக காத்திருந்தனர்.  சரியாக காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன், குடிமகன்கள் மதுபானங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்டன. முன்னதாக, தர்மபுரி, செங்கம், மதுரை, பரமக்குடி ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு மதுக்கடைகளை் திறக்க பெண்கள் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைபோல், திமுக கூட்டணிக்கட்சி தலைவர்களும் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு  தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து தங்கள் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக்  கடையை திறக்க 2-வது நாளாக எதிரிப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பாண்டி பஜாரில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைபோல், திருநெல்வேலி  மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் புதிய அரசு மதுபானக்கடைக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை செல்லூர்  மீனாட்சிபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணத்தில்  டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம்  திருவாணைக்காவலில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மதுக்கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: