கொரோனா விவகாரத்தால் சீனாவில் இருந்து வெளியேற அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்; இந்தியா பக்கம் ஈர்க்க அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை

டெல்லி: சீனாவில் இருந்து வெளியேறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்கச் செய்வதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ்  பாதிப்பிலிருந்து எப்போது தீர்வு கிடைக்கும்? எத்தனை நாட்கள் இது நம்முடன் இருக்கும்? உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த அனைத்து கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்.தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை எதையும் யாராலும் உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்று விட்டதாகவும், விரைவில் வர்த்த ரீதியான உற்பத்தி செய்யப்படும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, திட்டமிட்டே அமெரிக்காவை குறிவைத்து சீனாவின் வுகானில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. சீனாவின் ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதா அல்லது விலங்குகளிடம் இருந்து  பரவியதா என்பது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்.

இது தொடர்பான விவரங்களை உங்களிடம் தெரிவிக்க முடியாது. உலக சுகாதார நிறுவனம் தனது செயல்பாட்டிற்காக வெட்கப்படவேண்டும். சீனாவின் ஆய்வகத்தில் எந்த வகையான ஆராய்ச்சி நடக்கிறது மற்றும் வைரஸ் மற்றும் அதன் மாதிரிகள் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதும் நமக்கு தெரியும். சீனா வைரசை கட்டுப்படுத்தாததால் இன்று உலகமே அவதிக்குள்ளாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறத் திட்டமிட்டுள்ளன. இதையடுத்து மருத்துவக் கருவிள் தயாரிப்பு, உணவுப் பதப்படுத்தல், துணிகள், தோல் தொழில், வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 550 தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களை ஈர்ப்பதற்குப் பேச்சு நடைபெற்று வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: