விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பலி... 1,000 பேர் பாதிப்பு...!

நாயுடுதோட்டா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே ஆர்ஆர் வெங்கடபுரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம், அரிப்பு, கண் எரிச்சல் பொன்றவை ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் பொதுமக்களை மீட்பு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த வாயுக்கசிவால் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆர்ஆர் வெங்கடபுரம் பகுதியில் இருந்து, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இருப்பினும், எப்படி வாயுக்கசிவு ஏற்பட்டது என்பது குறித்து தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபக்கம் இருக்கும் வேலையில், ஆந்திராவில் இப்படி ஒரு சம்பவம் நடத்துள்ளது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: