கொரோனாவுக்கு மருந்து என ‘டூப்’ விட்ட போலி சித்த மருத்துவர் அதிரடி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வந்த போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் கணேசன் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை சந்தித்து போலி சித்த மருத்துவர் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக   பரப்பிய தவறான தகவல்களால் பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலி சித்த மருத்துவர் மீது உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5ம் தேதி போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் மீது தவறான தகவலை மக்களிடையே பரப்புவது உள்ளிட்ட 3 பிரிவுகளுக்கு மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அவரை மத்திய குற்றப்பிரிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தாக சமூகவலைதளங்களில் பேசி வந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் கைது செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும்பரப்பு ஏற்பட்டது.

இவர் தன்னை பரம்பரை சித்த மருத்துவர் என்று கூறிவந்தது குறிப் பிடத்தக்கது.

Related Stories: