கோடை காலம் துவங்கியதால் கொடைக்கானலுக்கு புதிய விருந்தாளி வருகை

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு புதிதாக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியுள்ளன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி, கொடைக்கானல் பழைய நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. இந்த பறவைகள் கோடை காலமான இந்த காலத்தில் மற்ற பகுதிகளில் வறண்ட சூழ்நிலை நிலவும் காரணத்தால் கொடைக்கானலுக்கு வந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்களும், பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இந்த பறவைகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த காலங்களில் கொடைக்கானல் வரும் இந்த பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து தங்கள் குஞ்சுகளுடன் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது. கொடைக்கானலுக்கு இந்த பறவைகள் வருவது வரவேற்கத் தகுந்த ஒன்றாக இருப்பதாகவும், இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி அடையக்கூடிய நிலை உள்ளது என பறவை மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: