செங்கல்பட்டு அருகே வடகால் வனப்பகுதியில் கள்ளச்சாராய மூலப்பொருட்கள் அழிப்பு

செங்கல்பட்டு:   தற்போது 144 பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு பகுதியில் திருட்டுதனமாக கள்ளச்சாராய வியாபாரம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.   மதுக்கடைகள் திறக்கப்படாததால் செங்கல்பட்டு அடுத்த வடகால் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திருட்டுதனமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து செங்கல்பட்டு கலால் காவல்துறையினர் வனப்பகுதியில்  தேடி வந்தனர். வனபகுதியில் பறைகளின் இடுக்குகளில் 500 லிட்டர் கொள்ளவுடைய 3 பேரல்களில் கள்ளச்சாராய  மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. செங்கல்பட்டு கலால்  காவல்துறை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி  தலைமையிலான குழு  அவற்றை கண்டறிந்து அழித்தனர். மூலப்பொருட்களை  மலை பகுதிகளில் பதுக்கி வைத்திருந்ததை அழித்த பின்னர் கள்ளச்சாராய தயாரிக்க மூலப்பொருட்களை பதுக்கி வைத்தவரை செங்கல்பட்டு கலால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: