எப்பண்டா கொரோனாவிடமிருந்து விடுதலை; ஊரடங்கு முடிந்தவுடன் காசி விஸ்வநாதரை தரிசிக்க பிரதமர் மோடி திட்டம்...வி.ஐ.பி.,க்களும் பயணத்திற்கு ஆவல்

டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எப்போழுது முடியும் என பொதுமக்களை விட வி.வி.ஐ.பி.,க்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனா பாதித்தவர்கள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37776 ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1223 ஆக உயர்ந்துள்ளது. 10018-பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  இதனால், வரும் மே 18-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திறியும் பொதுமக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பொதுமக்களின் மனநிலையில்தான்  தற்போது, வி.வி.ஐ.பி.,க்களும் இருப்பதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்து, விமான சேவை ஆரம்பித்த உடன், தன் தொகுதி தொகுதியான வாராணாசி செல்ல பிரதமர் நரேந்திர மோடி ஆசைப்படுகிறார், வாராணாசி சென்று காசி  விஸ்வநாதரை தரிசனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி. காத்திருக்கிறார்.

இதனைபோல், இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், ஊரடங்கு காலம் முடிந்தவுடன் முதல் விமானத்தை பிடித்து ஆந்திரா மாநிலம் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என, விரும்புகிறாராம்.  துணை ஜனாதிபதி வெங்கையா, குஜராத்தின் துவாரகாவில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய, கிருஷ்ணனை வேண்டியிருக்கிறார்.

இப்படி, வி.வி.ஐ.பி.,க்கள் அனைவரும், கொரோனா முடிவிற்குப் பின், கோவில் தரிசனத்திற்காக தயார் நிலையில் உள்ளனர். அவர்களின் பயணத்திற்காக, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. ஆனால்,  இவர்கள் மூவரும், ஒரே நாளில் பயணம் மேற்கொண்டால் பிரச்னை ஏற்படுமே என விமானப்படை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். மூன்று வி.வி.ஐ.பி.,க்களும் ஒரே நேரத்தில் வெளியூருக்கு பயணம் செய்யக் கூடாது என்பது, எழுதப்படாத  விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: