அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு மறுப்பு; கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை...உலக சுகாதார அமைப்பு விளக்கம்

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா தொற்றை  ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாததோடு, அதுகுறித்த சரியான தகவல்களை சீனா தெரிவிக்கவில்லை என்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, உலகம் முழுவதும், 3 கோடியே 40 லட்சத்து 90  பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 566 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மட்டும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரத்து 753 பேர் பலியாகி உள்ளனர். திட்டமிட்டே அமெரிக்காவை குறிவைத்து சீனாவின் வுகானில் உள்ள வைராலஜி ஆய்வுக்  கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. சீனாவின் ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதா அல்லது விலங்குகளிடம் இருந்து  பரவியதா என்பது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போதும், சந்தித்தார். சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இது  தொடர்பான விவரங்களை உங்களிடம் தெரிவிக்க முடியாது. உலக சுகாதார நிறுவனம் தனது செயல்பாட்டிற்காக வெட்கப்படவேண்டும். சீனாவின் ஆய்வகத்தில் எந்த வகையான ஆராய்ச்சி நடக்கிறது மற்றும் வைரஸ் மற்றும் அதன் மாதிரிகள்  எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதும் நமக்கு தெரியும். சீனா வைரசை கட்டுப்படுத்தாததால் இன்று உலகமே அவதிக்குள்ளாகி உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது என்ற அமெரிக்காவின் குற்றம் சாட்டிய நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோசித்த பிறகு WHO விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: