ஆஸ்திரேலியா முதலிடம்; டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது...சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பட்டியல் வெளியீடு

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறியுள்ளது. பட்டியலில் 115 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 2வது இடத்தில் உள்ளது.  

அக்டோபர் 2016 க்குப் பிறகு முதல் முறையாக இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. இது பெரும்பாலும் 2016-17ல் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வென்று ஒரு டெஸ்டில் மட்டுமே தோல்வியடைந்தது, சமீபத்திய பதிவில் அவற்றின் பதிவுகள் அகற்றப்பட்டன என்று ஐ.சி.சி அறிக்கை தெரிவித்துள்ளது.

அதில், ஒரு நாள் போட்டிகளில் 119 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பட்டியலில் 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. வரிசையில் 116 புள்ளிகளுடன் நியூசிலாந்து உள்ளது. 2011-ல் டி20 ஐ தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலியா 278 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 268 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2-வது இடத்தில் உள்ளது. 266 புள்ளிகளுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.2018 நியூசிலாந்தை முந்திய பின்னர் 27 மாதங்களுக்கு பின் பாகிஸ்தான், இப்போது 260 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Related Stories: