வளமான பூமியை உருவாக்க உறுதி ஏற்போம்; அன்பு காட்டும், நமது பூமிக்கு நன்றி... உலக பூமி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: தூய்மையான, ஆரோக்கியமான பூமியை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1969-ம் ஆண்டு  அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றின்  மிகப்பெரிய கொடூர நிகழ்வின் தாக்கமாக 1970-ம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென என  கடலோரமாகவே ஊர்வலம் சென்றனர்.

அந்த ஆண்டிலிருந்து பூமியையும் பூமியில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் உலக பூமி தினம் இன்று(ஏப்ரல் 22-ம் தேதி)  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், சர்வதேச பூமி  தினத்தில், அதிகளவிலான அன்பு மற்றும் இரக்கம் காட்டும், நமது பூமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூய்மையான. ஆரோக்கியமான மற்றும்  வளமான பூமியை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துடன் உலக பூமி தினம்  அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: