அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; கவன ஈர்ப்பு போரோட்டம் வாபஸ்...இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

டெல்லி: மருத்துவர்கள் தாக்குதலுக்கு எதிரான கவனஈர்ப்பு போரோட்டம் வாபஸ் பெறப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட  205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 19,984 பேர்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 640 பேர் உயிரிழந்த நிலையில், 3870 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ்  பரவலை தடுப்பதற்காக  முதலில் கடந்த மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு உத்தரவு கடந்த 14ம் தேதி முடிவுக்கு வந்தது. இருப்பினும்,  கொரோனா பரவல்  அதிகரித்ததால், அடுத்த மாதம் 3ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகின.  இதையடுத்து, மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என கூறி, தங்களது எதிர்ப்பை அரசிடம் பதிவு செய்யும் விதமாக மருத்துவர்கள் கருப்பு பட்டை  அணிந்து பணி செய்யும் தேசிய அளவிலான போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, டெல்லியில் இன்று காணொலி காட்சி மூலம் மத்திய அமித் ஷாவும், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தனும், மருத்துவர்கள்  மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அமைப்பினருடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது, நாடு முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணியில்  ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும்; அரசுக்கு எதிரான போராட்டத்தை  கைவிடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் தாக்குதலுக்கு எதிரான கவனஈர்ப்பு  போரோட்டம் வாபஸ் பெறப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: